PAK Vs OMA: பாகிஸ்தான் - ஓமன் 4வது லீக் போட்டி.. துபாயில் நாளை மோதல்..!

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், பாகிஸ்தான் எதிர் ஓமன் அணிகள் மோதும் 4வது லீக் போட்டி, நாளை (செப்டம்பர் 12) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

PAK Vs OMA: பாகிஸ்தான் - ஓமன் 4வது லீக் போட்டி.. துபாயில் நாளை மோதல்..!
PAK Vs OMA 4th Match (Photo Credit: @2Mirhamzamughal X | @CricketCapital7 X)

செப்டம்பர் 11, துபாய் (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 தொடர், செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் அணிகளும், குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இத்தொடர், சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. BAN Vs HKG: வங்கதேச அணி அபார பந்துவீச்சு.. வெற்றிக்கு 144 ரன்கள் இலக்கு..!

பாகிஸ்தான் எதிர் ஓமன் (Pakistan Vs Oman):

இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - ஓமன் (PAK Vs OMA) அணிகள் மோதும் 4வது லீக் போட்டி, நாளை (செப்டம்பர் 12) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஜதீந்தர் சிங் தலைமையிலான ஓமன் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் விளையாடவில்லை.

பாகிஸ்தான் அணி வீரர்கள்:

சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது வாசிம், சாஹிப்ஸாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் மிர்சா, ஷஹீன் அப்ரிடி, சுஃப்யான் மொகிம்.

ஓமன் அணி வீரர்கள்:

ஜதீந்தர் சிங் (கேப்டன்), ஹம்மாத் மிர்சா, விநாயக் சுக்லா, சுஃப்யான் யூசுப், ஆஷிஷ் ஒடெடேரா, அமீர் கலீம், முகமது நதீம், சுஃப்யான் மெஹ்மூத், ஆர்யன் பிஷ்ட், கரண் சோனாவலே, ஜிக்ரியா இஸ்லாம், ஹஸ்னைன் அலி ஷா, பைசல் ஷா, முஹம்மது அலி ஷா, பைசல் ஷா, முகமது இம்ரான், நதீம் கான், ஷகீல் அகமது, சமய் ஸ்ரீவஸ்தவா.

(The above story first appeared on LatestLY on Sep 11, 2025 11:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).