செப்டம்பர் 11, அபுதாபி (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 தொடர், செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகிய 4 அணிகளும், குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 4 அணிகளும் இடம்பிடித்துள்ளன. இத்தொடரை, சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் பார்க்கலாம். BAN Vs HKG, Toss: ஹாங்காங் எதிரான 3வது லீக் போட்டி.. வங்கதேச அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!
வங்கதேசம் எதிர் ஹாங்காங் (Bangladesh Vs Hong Kong):
இந்நிலையில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் - ஹாங்காங் (BAN Vs HKG) அணிகள் மோதும் 3வது லீக் போட்டி, இன்று (செப்டம்பர் 11) நடைபெறுகிறது. இப்போட்டி, அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் விக்கெட்களை இழந்து ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக நிஜாகத் கான் 42 ரன்கள், ஜீஷன் அலி 30 ரன்கள், கேப்டன் யாசிம் முர்தாசா 28 ரன்கள் அடித்தனர். வங்கதேச அணி சார்பில் ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
வங்கதேச அணி வீரர்கள்:
பர்வேஸ் ஹொசைன் எமோன், தன்சித் ஹசன் தமீம், லிட்டன் தாஸ் (கேப்டன்), தௌஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், ஜேக்கர் அலி, மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.
ஹாங்காங் அணி வீரர்கள்:
ஜீஷன் அலி, அன்ஷுமன் ராத், பாபர் ஹயாத், நிஜாகத் கான், கல்ஹான் சல்லு, கிஞ்சித் ஷா, யாசிம் முர்தாசா (கேப்டன்), அய்சாஸ் கான், எஹ்சான் கான், ஆயுஷ் சுக்லா, அதீக் இக்பால்.