BAN Vs SL: வங்கதேசம் - இலங்கை 5வது லீக் மேட்ச்.. நாளை பலப்பரீட்சை..!
ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், வங்கதேசம் எதிர் இலங்கை அணிகள் மோதும் 5வது லீக் போட்டி, நாளை (செப்டம்பர் 13) அபுதாபியில் நடைபெறவுள்ளது.
செப்டம்பர் 12, அபுதாபி (Sports News): 2025 ஆசிய கோப்பை (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் அணிகளும், குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இத்தொடர், சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. PAK Vs OMA: பாகிஸ்தான் - ஓமன் 4வது லீக் போட்டி.. துபாயில் நாளை மோதல்..!
வங்கதேசம் எதிர் இலங்கை (Bangladesh Vs Sri Lanka):
இந்நிலையில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் - இலங்கை (BAN Vs SL) அணிகள் மோதும் 5வது லீக் போட்டி, நாளை (செப்டம்பர் 13) அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில், லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி, சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 20 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், வங்கதேச அணி 8 போட்டிகளிலும், இலங்கை அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
வங்கதேச அணி வீரர்கள்:
லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைஃப் ஹசன், தௌஹித் ஹ்ரிடோய், ஜேக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன், நூருல் ஹசன் சோஹன், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஷைஃப் உதீன்.
இலங்கை அணி வீரர்கள்:
சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், கமில் மிஷார, தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷாரா, மதீஷ பத்திரனா.
(The above story first appeared on LatestLY on Sep 12, 2025 05:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

