IND Vs BAN: ஆசிய கோப்பை 2025; பைனலுக்கு சென்றது இந்தியா.. 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் வங்கதேச அணிகள் மோதிய 16வது போட்டியில், இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IND Vs BAN: ஆசிய கோப்பை 2025; பைனலுக்கு சென்றது இந்தியா.. 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
India Vs Bangladesh (Photo Credit: @odisha_links X)

செப்டம்பர் 24, துபாய் (Sports News): 2025 ஆசிய கோப்பை (Asia Cup 2025) டி20 தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின், லீக் சுற்று போட்டிகள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுன. இதில், முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடும். இத்தொடர், சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. PAK Vs BAN: பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் நாளை பலப்பரீட்சை.. பைனலுக்கு செல்லப்போவது யார்..?

இந்தியா எதிர் வங்கதேசம் (India Vs Bangladesh):

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 24) சூப்பர் 4 சுற்றில் 16வது போட்டியில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஜேக்கர் அலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 37 பந்தில் 75 ரன்கள் மற்றும் ஹர்திக் பாண்டியா 38 ரன்கள் அடித்தனர்.

இந்தியா அபார வெற்றி:

வங்கதேச அணி சார்பில் ரிஷாத் ஹொசைன் 2, டான்சிம் ஹசன் சாகிப், முஸ்தாபிசுர் ரஹ்மான், முகமது சைபுதீன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 19.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சைஃப் ஹாசன் 69 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம், இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஆசிய கோப்பை பைனலுக்கு சென்றது.

இந்திய அணி வீரர்கள்:

அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

வங்கதேச அணி வீரர்கள்:

சைஃப் ஹாசன், தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமன், தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், ஜேக்கர் அலி (கேப்டன்), முகமது சைபுதீன், ரிஷாத் ஹொசைன், டான்சிம் ஹசன் சாகிப், நாசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).