செப்டம்பர் 24, துபாய் (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கியது. இத்தொடர், சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் தகுதிபெற்றுள்ளன. முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடும். IND Vs BAN: அபிஷேக் சர்மா அதிரடி பேட்டிங்.. வங்கதேசம் வெற்றி பெற 169 ரன்கள் இலக்கு..!
பாகிஸ்தான் எதிர் வங்கதேசம் (Pakistan Vs Bangladesh):
இந்நிலையில், நாளை (செப்டம்பர் 25) சூப்பர் 4 சுற்றில் 17வது போட்டியில், பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 25 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் அணி 20 போட்டிகளிலும், வங்கதேச அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான், சல்மான் ஆகா (கேப்டன்), ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அஹ்மத், ஹசன் அலி, முகமது வாசிம், சல்மான் மிர்சா, சுபியான் முகீம், குஷ்தில் ஷா, ஹசன் நவாஸ்.
வங்கதேச அணி வீரர்கள்:
சைஃப் ஹாசன், தன்சித் ஹசன் தமீம், லிட்டன் தாஸ் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், ஜேக்கர் அலி, மஹேதி ஹசன், நாசும் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், நூருல் ஹசன், முகமது சைபுதீன், ரிஷாத் ஹொசைன், பர்வேஸ் ஹொசைன் எமன், டான்சிம் ஹசன் சாகிப்.