IND Vs BAN: இந்தியா - வங்கதேசம் அணிகள் நாளை மோதல்.. இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா..?

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் வங்கதேச அணிகள் மோதும் 16வது போட்டி, நாளை (செப்டம்பர் 24) துபாயில் நடைபெறவுள்ளது.

IND Vs BAN: இந்தியா - வங்கதேசம் அணிகள் நாளை மோதல்.. இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா..?
IND Vs BAN (Photo Credit: @Indianpeople218 X)

செப்டம்பர் 23, துபாய் (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடைபெறும். இத்தொடரை, சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் பார்க்கலாம். மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் தகுதிபெற்றுள்ளன. PAK Vs SL: பாகிஸ்தான் அசத்தல் பந்துவீச்சு.. கமிந்து மெண்டிஸ் அரைசதம் விளாசல்..!

இந்தியா எதிர் வங்கதேசம் (India Vs Bangladesh):

இந்நிலையில், நாளை (செப்டம்பர் 24) சூப்பர் 4 சுற்றில் 16வது போட்டியில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 17 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இந்தியா 16 போட்டிகளிலும், வங்கதேச அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய அணி வீரர்கள்:

அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.

வங்கதேச அணி வீரர்கள்:

சைஃப் ஹாசன், தன்சித் ஹசன் தமீம், லிட்டன் தாஸ் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், ஜேக்கர் அலி, மஹேதி ஹசன், நாசும் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், நூருல் ஹசன், முகமது சைபுதீன், ரிஷாத் ஹொசைன், பர்வேஸ் ஹொசைன் எமன், டான்சிம் ஹசன் சாகிப்.

(The above story first appeared on LatestLY on Sep 23, 2025 10:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).