PAK Vs SL: பாகிஸ்தான் அசத்தல் பந்துவீச்சு.. கமிந்து மெண்டிஸ் அரைசதம் விளாசல்..!

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) பாகிஸ்தான் எதிர் இலங்கை அணிகள் மோதும் 15வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 133 ரன்கள் அடித்துள்ளது.

PAK Vs SL: பாகிஸ்தான் அசத்தல் பந்துவீச்சு.. கமிந்து மெண்டிஸ் அரைசதம் விளாசல்..!
PAK Vs SL Batting First (Photo Credit: @guerillacricket X)

செப்டம்பர் 23, அபுதாபி (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடைபெறும். இத்தொடரை, சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் பார்க்கலாம். மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் தகுதிபெற்றுள்ளன. PAK Vs SL, Toss: இலங்கை அணிக்கு எதிரான வாழ்வா - சாவா போட்டி.. பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

பாகிஸ்தான் எதிர் இலங்கை (Pakistan Vs Sri Lanka):

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 23) சூப்பர் 4 சுற்றில் 15வது போட்டியில், பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இப்போட்டி, அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. வாழ்வா - சாவா ஆட்டத்தில் இன்று, சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அபாரம்:

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 50 ரன்கள் அடித்தார். கேப்டன் சரித் அசலங்கா 20 ரன்கள் மற்றும் குசல் மெண்டிஸ், தசுன் ஷனக்க டக் அவுட்டாகினர். பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3, ஹாரிஸ் ரவுஃப் மற்றும் ஹுசைன் தலாத் தலா 2, அப்ரார் அஹ்மத் 1 விக்கெட்டை வீழ்த்தினர். பாகிஸ்தான் அணி வெற்றி பெற 134 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி வீரர்கள்:

சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான், சல்மான் ஆகா (கேப்டன்), ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அஹ்மத்.

இலங்கை அணி வீரர்கள்:

பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, சரித் அசலங்க (கேப்டன்), தசுன் ஷனக்க, கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, நுவன் துஷார.

(The above story first appeared on LatestLY on Sep 23, 2025 10:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).