IND Vs OMA, Toss: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. இந்திய அணியில் 2 மாற்றம்..!

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், இந்தியா எதிர் ஓமன் அணிகள் மோதும் 12வது லீக் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

IND Vs OMA, Toss: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. இந்திய அணியில் 2 மாற்றம்..!
IND Vs OMA, Toss (Photo Credit: @Sbettingmarkets X)

செப்டம்பர் 19, அபுதாபி (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டி, செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும். இத்தொடரை, சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் பார்க்கலாம். மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் தகுதிபெற்றுள்ளன. IND Vs OMA: இந்தியா - ஓமன் அணிகள் இன்று பலப்பரீட்சை.. இந்தியாவை சமாளிக்குமா ஓமன்..?

இந்தியா எதிர் ஓமன் (India Vs Oman):

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 19) கடைசி மற்றும் 12வது லீக் போட்டியில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - ஓமன் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டி, அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஜதீந்தர் சிங் தலைமையிலான ஓமன் அணியை எதிர்கொள்கிறது. வலுவான இந்திய அணியை ஓமன் அணி சமாளிக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள்:

அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

ஓமன் அணி வீரர்கள்:

அமீர் கலீம், ஜதீந்தர் சிங் (கேப்டன்), ஹம்மத் மிர்சா, விநாயக் சுக்லா, ஷா பைசல், ஜிக்ரியா இஸ்லாம், ஆர்யன் பிஷ்ட், முகமது நதீம், ஷகீல் அகமது, சமய் ஸ்ரீவஸ்தவா, ஜிதன் ரமானந்தி.

(The above story first appeared on LatestLY on Sep 19, 2025 07:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).