செப்டம்பர் 19, அபுதாபி (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டி, செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும். இத்தொடரை, சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் பார்க்கலாம். மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் தகுதிபெற்றுள்ளன. IRE Vs ENG 2nd T20I: அயர்லாந்து - இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை.. 2வது டி20யில் வெற்றி பெறுமா அயர்லாந்து..?
இந்தியா எதிர் ஓமன் (India Vs Oman):
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 19) கடைசி மற்றும் 12வது லீக் போட்டியில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - ஓமன் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டி, அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஜதீந்தர் சிங் தலைமையிலான ஓமன் அணியை எதிர்கொள்கிறது. வலுவான இந்திய அணியை ஓமன் அணி சமாளிக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய அணி வீரர்கள்:
அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.
ஓமன் அணி வீரர்கள்:
அமீர் கலீம், ஜதீந்தர் சிங் (கேப்டன்), ஹம்மத் மிர்சா, விநாயக் சுக்லா, வாசிம் அலி, ஹஸ்னைன் ஷா, ஷா பைசல், ஜிதன் ரமானந்தி, ஆர்யன் பிஷ்ட், ஷகீல் அகமது, சமய் ஸ்ரீவஸ்தவா, முகமது நதீம், சுஃப்யான் மெஹ்மூத், கரண் சோனாவலே, ஆஷிஷ் ஒடேடரா, முகமது இம்ரான், ஜிக்ரியா இஸ்லாம், நதீம் கான், சுஃப்யான் யூசப்.