IND Vs SL: இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதல்.. ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை..?

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர் இலங்கை அணிகள் மோதும் 18வது போட்டி, நாளை (செப்டம்பர் 26) துபாயில் நடைபெறவுள்ளது.

IND Vs SL (Photo Credit: @ekrummy8 X)

செப்டம்பர் 25, துபாய் (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 09ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. இத்தொடர், சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் தகுதிபெற்றன. இதில், இந்தியா 2 போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் வெற்றி பெற்று முதல் அணியாக பைனலுக்கு சென்றது. இலங்கை அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறியது. செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. PAK Vs BAN: பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் அபார பந்துவீச்சு.. இறுதிப்போட்டிக்கு செல்ல 136 ரன்கள் இலக்கு..!

இந்தியா எதிர் இலங்கை (India Vs Sri Lanka):

இந்நிலையில், நாளை (செப்டம்பர் 26) சூப்பர் 4 சுற்றில் 18வது போட்டியில், இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 31 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி 21 போட்டிகளிலும், இலங்கை அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவில்லை.

இந்திய அணி வீரர்கள்:

அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.

இலங்கை அணி வீரர்கள்:

பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமில் மிஷார, குசல் பெரேரா, சரித் அசலங்க (கேப்டன்), தசுன் ஷனக்க, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, நுவனிது பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ, சாமிக்க கருணாரத்ன, ஜனித் லியனகே, மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷன.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement