PAK Vs BAN Batting First (Photo Credit: @GulfNewsSport X)

செப்டம்பர் 25, துபாய் (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் தகுதிபெற்றன. ஏற்கனவே, இந்தியா முதலிடத்தை பிடித்து பைனலுக்கு சென்றது. இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது. எனவே, இன்று பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி, செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும். இத்தொடர், சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. PAK Vs BAN, Toss: வங்கதேச அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்..?

பாகிஸ்தான் எதிர் வங்கதேசம் (Pakistan Vs Bangladesh):

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 25) சூப்பர் 4 சுற்றில் 17வது போட்டியில், பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஜேக்கர் அலி தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஜேக்கர் அலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வங்கதேசம் அபாரம்:

அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 135 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக முகமது ஹாரிஸ் 31 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். சைம் அயூப், இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி, 4 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளார். வங்கதேச அணி சார்பில் தஸ்கின் அகமது 3, மஹேதி ஹசன் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்கள், முஸ்தாபிசுர் ரஹ்மான் 1 விக்கெட்டை வீழ்த்தினர். வங்கதேச அணி வெற்றி பெற 136 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி வீரர்கள்:

சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான், சைம் அயூப், சல்மான் ஆகா (கேப்டன்), ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அஹ்மத்.

வங்கதேச அணி வீரர்கள்:

சைஃப் ஹாசன், பர்வேஸ் ஹொசைன் எமன், தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், ஜேக்கர் அலி (கேப்டன்), நூருல் ஹசன், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, டான்சிம் ஹசன் சாகிப், முஸ்தாபிசுர் ரஹ்மான்.