PAK Vs BAN, Toss: வங்கதேச அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்..?
ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் எதிர் வங்கதேச அணிகள் மோதும் 17வது போட்டியில், வங்கதேசம் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
செப்டம்பர் 25, துபாய் (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் தகுதிபெற்றன. ஏற்கனவே, இந்தியா முதலிடத்தை பிடித்து பைனலுக்கு சென்றது. இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது. எனவே, இன்று பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி, செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில், இந்தியாவை எதிர்கொள்ளும். இத்தொடர், சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. IND Vs WI Test Squad 2025: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் 2025; 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..!
பாகிஸ்தான் எதிர் வங்கதேசம் (Pakistan Vs Bangladesh):
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 25) சூப்பர் 4 சுற்றில் 17வது போட்டியில், பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஜேக்கர் அலி தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 25 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் அணி 20 போட்டிகளிலும், வங்கதேச அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஜேக்கர் அலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான், சைம் அயூப், சல்மான் ஆகா (கேப்டன்), ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அஹ்மத்.
வங்கதேச அணி வீரர்கள்:
சைஃப் ஹாசன், பர்வேஸ் ஹொசைன் எமன், தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், ஜேக்கர் அலி (கேப்டன்), நூருல் ஹசன், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, டான்சிம் ஹசன் சாகிப், முஸ்தாபிசுர் ரஹ்மான்.
(The above story first appeared on LatestLY on Sep 25, 2025 07:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

