IND Vs WI Test Squad 2025 (Photo Credit: @gujratsamachar X)

செப்டம்பர் 25, மும்பை (Sports News): வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (IND Vs WI) விளையாடவுள்ளது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், துணைக் கேப்டனாக சீனியர் வீரர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக ரிஷப் பண்ட் ஓய்வில் உள்ளார். இதனால், அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் செயல்படுவார். மேலும், மாற்று விக்கெட் கீப்பராக தமிழக வீரர் என். ஜெகதீசன் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சொதப்பிய கருண் நாயர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். IND Vs BAN: ஆசிய கோப்பை 2025; பைனலுக்கு சென்றது இந்தியா.. 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

இந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் 2025 (India Vs West Indies Test Series 2025):

பேட்ஸ்மேன்களை பொறுத்தவரை, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல் ஆகியோரும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக துருவ் ஜுரெல் மற்றும் என். ஜெகதீசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர்களாக சீனியர் வீரர் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி உள்ளனர். சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். முதலாவது டெஸ்ட் போட்டி, அக்டோபர் 02ஆம் தேதி முதல் 06ஆம் தேதி வரை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி, அக்டோபர் 10ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள்:

சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா (துணைக் கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதீஷ் குமார் ரெட்டி, என். ஜெகதீசன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.

15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு: