செப்டம்பர் 23, அபுதாபி (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடைபெறும். இத்தொடரை, சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் பார்க்கலாம். மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் தகுதிபெற்றுள்ளன. Yuvraj Singh: சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு; முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் விசாரணை..!
பாகிஸ்தான் எதிர் இலங்கை (Pakistan Vs Sri Lanka):
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 23) சூப்பர் 4 சுற்றில் 15வது போட்டியில், பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டி, அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. வாழ்வா - சாவா ஆட்டத்தில் இன்று, சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 23 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் 13 போட்டிகளிலும், இலங்கை அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான், சல்மான் ஆகா (கேப்டன்), ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அஹ்மத்.
இலங்கை அணி வீரர்கள்:
பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, சரித் அசலங்க (கேப்டன்), தசுன் ஷனக்க, கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, நுவன் துஷார.