PAK Vs UAE: வேகத்தில் மிரட்டிய ஜுனைத் சித்திக்.. யுஏஇ வெற்றி பெற 147 ரன்கள் இலக்கு..!
ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் ஏ பிரிவில், பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதும் 10வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 146 ரன்கள் அடித்துள்ளது.
செப்டம்பர் 17, துபாய் (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டி, செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும். குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகிய 4 அணிகளும், குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 4 அணிகள் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடரை, சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் பார்க்கலாம். IRE Vs ENG 1st T20I: பிலிப் சால்ட் அதிரடி பேட்டிங்.. இங்கிலாந்து அபார வெற்றி..!
பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம் (Pakistan Vs United Arab Emirates):
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 17) 10வது லீக் போட்டியில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்த விவகாரத்தில், பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இப்போட்டி 1 மணிநேரம் தாமதமாக தொடங்கியது. இதில், டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
யுஏஇ அபார பந்துவீச்சு:
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 146 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஃபகார் ஜமான் 50 ரன்கள், ஷாஹீன் அப்ரிடி 29* ரன்கள் அடித்தனர். யுஏஇ அணி சார்பில் வேகத்தில் மிரட்டிய ஜுனைத் சித்திக் 4 விக்கெட்கள், சிம்ரன்ஜீத் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தினர். யுஏஇ அணி வெற்றி பெற 147 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், முகமது ஹாரிஸ், ஃபகார் ஜமான், சல்மான் ஆகா (கேப்டன்), குஷ்தில் ஷா, ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது.
ஐக்கிய அரபு அமீரகம் அணி வீரர்கள்:
அலிஷன் ஷராபு, முஹம்மது வசீம் (கேப்டன்), ஆசிப் கான், முஹம்மது ஜோஹைப், ஹர்ஷித் கௌஷிக், ராகுல் சோப்ரா, துருவ் பராஷர், ஹைதர் அலி, முஹம்மது ரோஹித் கான், சிம்ரன்ஜீத் சிங், ஜுனைத் சித்திக்.