Ireland Vs England 1st T20I (Photo Credit: @ESPNcricinfo X)

செப்டம்பர் 17, டப்லின் (Sports News): இங்கிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும், டப்லினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும். அயர்லாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டி இன்று (செப்டம்பர் 17) நடைபெற்றது. PAK Vs UAE, Toss: டாஸ் போடுவதில் ஒரு மணிநேரம் தாமதம்.. யுஏஇ அணி பவுலிங் தேர்வு..!

அயர்லாந்து எதிர் இங்கிலாந்து (Ireland Vs England):

பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி, ஜேக்கப் பெத்தேல் தலைமையிலான இங்கிலாந்து அணியை இன்று எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜேக்கப் பெத்தேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் 34, ரோஸ் அடேர் 26 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கம் அமைத்தனர். இதன்பின்னர், ஹாரி டெக்டர் 61* ரன்கள், லோர்கன் டக்கர் 55 ரன்கள் அடித்தனர். இதன்மூலம், அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 196 ரன்கள் அடித்தது.

இங்கிலாந்து வெற்றி:

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 17.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 197 ரன்கள் அடித்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் பிலிப் சால்ட் 46 பந்தில் 89 ரன்கள் (10 பவுண்டரிகள், 4 சிக்சர்) அடித்தார். அயர்லாந்து அணி சார்பில் கிரஹாம் ஹியூம் மற்றும் மேத்யூ ஹம்ப்ரிஸ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை பிலிப் சால்ட் பெற்று சென்றார்.

அயர்லாந்து அணி வீரர்கள்:

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ரோஸ் அடேர், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கர்டிஸ் கேம்பர், கேரத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், பாரி மெக்கார்த்தி, கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரிஸ், கிரேக் யங்.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல் (கேப்டன்), ரெஹான் அகமது, டாம் பான்டன், சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், அடில் ரஷீத், லூக் வுட்.