SL Vs BAN 1st Test, Day 1: சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம் அபார சதம்.. சோர்வடைந்த இலங்கை பவுலர்கள்..!
இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், வங்கதேச அணி 90 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 292 ரன்கள் அடித்துள்ளது.
ஜூன் 17, காலி (Sports News): வங்கதேசம் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (SL Vs BAN Test Series 2025) விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 17) முதல் ஜூன் 21ஆம் தேதி வரையும், 2வது டெஸ்ட் போட்டி, ஜூன் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரை, சோனி லிவ் தொலைக்காட்சி, பேன்கோடு இணையதளம் மற்றும் ஆப்பில் நேரலையில் (SL Vs BAN Test Live Streaming) பார்க்கலாம். இன்று, முதல் டெஸ்ட் போட்டி (SL Vs BAN 1st Test) இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். TGC Vs LKK: திருச்சி - கோவை அணிகள் இன்று பலப்பரீட்சை.. தோல்வியில் இருந்து மீளப்போவது யார்..?
இலங்கை எதிர் வங்கதேசம் (Sri Lanka Vs Bangladesh):
அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஷத்மான் இஸ்லாம் - அனாமுல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தது. அனாமுல் ஹக் 10 பந்துகள் விளையாடி 0 ரன்னில் அவுட்டாகினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷத்மான் இஸ்லாம் 53 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே அடித்து விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து, மொமினுல் ஹக் 29 ரன்னில் நடையை கட்டினார். இதனையடுத்து, கேப்டன் சாண்டோ மற்றும் அனுபவம் வாய்ந்த முஷ்பிகுர் ரஹீம் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக விளையாடி சதமடித்து அசத்தினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில், வங்கதேச அணி 90 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 292 ரன்கள் அடித்துள்ளது. சாண்டோ 260 பந்துகளில் 136* ரன்கள், முஷ்பிகுர் ரஹீம் 186 பந்துகளில் 105* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 4வது விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்துள்ளனர்.
இலங்கை அணி வீரர்கள்:
பதும் நிசங்கா, லஹிரு உதார, தினேஷ் சன்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), குசல் மெண்டிஸ், மிலன் பிரியநாத் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, அசித்த பெர்னாண்டோ.
வங்கதேச அணி வீரர்கள்:
ஷத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக், மொமினுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், ஜாக்கர் அலி, நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், நஹித் ராணா.
(The above story first appeared on LatestLY on Jun 17, 2025 05:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

