TGC Vs LKK (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 17, சேலம் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று முடிந்தன. தொடர்ந்து, 2வது சுற்று லீக் ஆட்டங்கள் ஜூன் 13ஆம் தேதி முதல், ஜூன் 19ஆம் தேதி வரை வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று (ஜூன் 16) நடைபெற்ற 14வது லீக் போட்டியில், திண்டுக்கல் அணியை வீழ்த்தி சேப்பாக் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. DD Vs CSG: சேப்பாக் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. திண்டுக்கல் அணி சொதப்பல்..!

திருச்சி கிராண்ட் சோழஸ் எதிர் லைகா கோவை கிங்ஸ் (Trichy Grand Cholas Vs Lyca Kovai Kings):

இந்நிலையில், இன்று (ஜூன் 17) திருச்சி கிராண்ட் சோழஸ் - லைகா கோவை கிங்ஸ் (TGC Vs LKK, Match 15) அணிகள் மோதுகின்றன. சுரேஷ் குமார் தலைமையிலான திருச்சி அணி, ஷாருக்கான் தலைமையிலான கோவை அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கோவை அணி 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இத்தொடரில், இரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளன. இதனால் இன்றைய ஆட்டத்தில் ஏதேனும் ஒரு அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி கிராண்ட் சோழஸ் அணி வீரர்கள்:

சுரேஷ் குமார் (கேப்டன்), சுஜய் சிவசங்கரன், வசீம் அகமது, ஜகதீசன் கவுசிக், சஞ்சய் யாதவ், யு முகிலேஷ், ஆர் ராஜ்குமார், ஜாஃபர் ஜமால், பி சரவண குமார், என் செல்வகுமாரன், வி அதிசயராஜ் டேவிட்சன், கே ஈஸ்வரன், ஆன்டனி தாஸ், வாஷிங்டன் சுந்தர், எம் கணேஷ் மூர்த்தி, ஆர்யா யோஹன் மேனன், டி சரண், எஸ்பி வினோத், ஜே ரெஜின்.

லைகா கோவை கிங்ஸ் அணி வீரர்கள்:

ஷாருக்கான் (கேப்டன்), சுரேஷ் லோகேஷ்வர், ஜிதேந்திர குமார், பாலசுப்ரமணியம் சச்சின், ஆன்ட்ரே சித்தார்த், குரு ராகவேந்திரன், மாதவ பிரசாத், எம் சித்தார்த், ராமலிங்கம் ரோஹித், பி புவனேஸ்வரன், பி விட்யூத், பி ஆதித்யா, கே விஷால் வைத்யா, ஜாதவேத் சுப்ரமண்யன், சாய் சுதர்சன், ரமேஷ் திவாகர், கோவிந்த் ஜி, என் கபிலன், பிரதீப் விஷால், அம்ப்ரிஷ்.