AUS Vs SA 2nd T20I: ருத்ரதாண்டவம் ஆடிய டெவால்ட் ப்ரீவிஸ்.. ஆஸ்திரேலியா வெற்றிக்கு 219 ரன்கள் இமாலய இலக்கு..!

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (AUS VS SA T20I) அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 218 ரன்கள் அடித்துள்ளது.

AUS Vs SA 2nd T20I: ருத்ரதாண்டவம் ஆடிய டெவால்ட் ப்ரீவிஸ்.. ஆஸ்திரேலியா வெற்றிக்கு 219 ரன்கள் இமாலய இலக்கு..!
AUS Vs SA 2nd T20I Batting First (Photo Credit: @CricCrazyJohns X)

ஆகஸ்ட் 12, டார்வின் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா (AUS Vs SA) அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி, இன்று (ஆகஸ்ட் 12) டார்வின் நகரில் உள்ள மர்ராரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2:45 மணிக்கு தொடங்கியது. AUS Vs SA 2nd T20I, Toss: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி20 போட்டி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு..!

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (Australia Vs South Africa):

மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும், தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் தொடரைச் சமன் செய்யலாம். இதனால், தென்னாப்பிரிக்க அணி இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

டெவால்ட் ப்ரீவிஸ் அதிரடி சதம்:

அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 218 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டெவால்ட் ப்ரீவிஸ் அதிரடியாக விளையாடி 56 பந்துகளில் 125* (12 பவுண்டரி, 8 சிக்ஸர்) அடித்தார். டெவால்ட் ப்ரீவிஸ், ஆஸ்திரேலியா பவுலிங்கை வெளுத்து வாங்கினார். ஆஸ்திரேலியா சார்பில் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் பென் டுவார்ஷுயிஸ் தலா 2, ஆடம் ஜாம்பா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்):

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கேமரூன் கிரீன், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், அலெக்ஸ் கேரி, பென் டுவார்ஷுயிஸ், சீன் அபோட், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட். WI Vs PAK 3rd ODI: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் 3வது ஒருநாள் போட்டி.. தொடரை வெல்ல போவது யார்..?

தென்னாப்பிரிக்கா (பிளேயிங் லெவன்):

ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ரியான் ரிகெல்டன், ரஸ்ஸி வான் டெர் டுசென், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டெவால்ட் ப்ரீவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கார்பின் போஷ், ககிசோ ரபாடா, நகாபயோம்ஸி பீட்டர், க்வேனா மபாகா, லுங்கி என்கிடி.

(The above story first appeared on LatestLY on Aug 12, 2025 04:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).