WI Vs PAK 3rd ODI: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் 3வது ஒருநாள் போட்டி.. தொடரை வெல்ல போவது யார்..?

வெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (WI Vs PAK ODI) அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 12) டிரினிடாட்டில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

WI Vs PAK 3rd ODI: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் 3வது ஒருநாள் போட்டி.. தொடரை வெல்ல போவது யார்..?
WI Vs PAK 3rd ODI (Photo Credit: @Cusi567 X)

ஆகஸ்ட் 11, டிரினிடாட் (Sports News): பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த டி20 தொடரில், பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, நாளை (ஆகஸ்ட் 12) டிரினிடாட்டின் டரூபாவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. WI Vs PAK 1st ODI, Toss: வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி.. பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

வெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (West Indies Vs Pakistan):

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் (WI Vs PAK) அணிகள் இதுவரை 139 ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணி 72 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 64 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்கும். இப்போட்டியை பேன்கோடு (FanCode) செயலி மற்றும் இணையதளத்தில் நேரலையாகக் காணலாம்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:

ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, ஜெடியா பிளேட்ஸ், கீசி கார்டி ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோதி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்.

பாகிஸ்தான் அணி வீரர்கள்:

முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசம், ஃபஹீம் அஷ்ரப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், நசீம் ஷா, சைம் அயூப், ஷஹீன் ஷா அப்ரிடி, சுஃப்யான் முகீம்.

(The above story first appeared on LatestLY on Aug 11, 2025 05:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).