Stefan Lainer Cancer: பிரபல ஆஸ்திரிய கால்பந்தாட்ட வீரர் ஸ்டீபன் லைனெருக்கு புற்றுநோய்; மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!

கால்பந்தாட்ட வீரர் ஸ்டீவனுக்கு உரிய சிகிச்சை கிடைக்க அணியின் சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stefan Lainer Cancer: பிரபல ஆஸ்திரிய கால்பந்தாட்ட வீரர் ஸ்டீபன் லைனெருக்கு புற்றுநோய்; மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!
Austria Football Player Stefan Lainer (Photo Credit: Twitter)

ஜூலை 27, மொயன்சென்கிளாட்பாக் (Germany): ஆஸ்திரியா கால்பந்தாட்ட அணியின் டிபன்டர் ஸ்டீவன் லைனர், அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவரின் கால்பந்தாட்ட அணி உறுதி செய்துள்ளது.

30 வயதாகும் டிபன்டர் ஸ்டீவன் ரைட்-பேக், மிட்-பிடில் ஆட்டக்காரர் ஆவார். இவர் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் உட்பட பல ஆட்டத்திற்காக 38 முறை விளையாடி இருக்கிறார்.

அதேபோல, 2019ல் ஜெர்மன் லீக்கில் விளையாடும்போதுஸ் சர்வதேச அளவிலும் கவனிக்கப்பட்டார். தற்போது புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். Chat GPT Fine: 687 பேரின் தனிப்பட்ட தகவலை பொதுவெளியில் கசியவிட்ட சாட் ஜிபிடி; ரூ.2.5 இலட்சம் அபராதம் விதித்த தென்கொரிய அரசு.!

இந்த புற்றுநோய் ஆரம்பகட்டத்தில் கண்டறியப்பட்டதால் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. அவரின் உடலநலம் தொடர்ந்து முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்தாட்ட வீரர் ஸ்டீவனுக்கு உரிய சிகிச்சை கிடைக்க அணியின் சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் தனிஉரிமையை பாதுகாக்க சிகிச்சை விபரங்கள் குறித்து தெரிவிக்கப்படாது என அவரின் அணி தெரிவித்துள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 28, 2023 02:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).