Open AI Chat GPT (Photo Credit: Pixabay)

ஜூலை 28 , தென்கொரியா (Technology News): எலான் மஸ்க் உட்பட பல நிர்வாகிகளை இயக்குனராக கொண்ட நிறுவனம் Chat GPT. Open AI நிறுவனத்தின் அங்கமாக அறிமுகம் செய்யப்பட்ட Chat GPT, செயற்கை நுண்ணறிவு திறனுடன் செயல்படும் அமைப்பு ஆகும். இது பல பயனர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தென்கொரியாவில் சாட் ஜிடிபி 687 பயனர்களின் தனிஉரிமையை மீறி, அவர்களின் தரவுகளை வெளியுலகுக்கு சட்டவிரோதமாக தெரியப்படுத்தியாக கூறி, அந்நாட்டின் தனிநபர் தகவல் பாதுகாப்பு அமைப்பு புகார் தெரிவித்து, Open AI நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.2.5 இலட்சம் (3.6 Million Won - 2,829 US Dollor) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. Indian Origin Student US: மின்னல் தாக்குதலில் சிக்கி உயிருக்கு போராடும் இந்திய வம்சாவளி மாணவி; அமெரிக்கா விரையும் பெற்றோர்.! 

அதாவது, சாட் ஜிபிடி பயன்படுத்தும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள், பெயர்கள், மின்னஞ்சல் முகவரி விபரங்கள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் தனிப்பட்ட தரவுகளை பொதுவெளியில் அம்பலப்படுத்தியது அந்நாட்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் உறுதி செய்யபட்டுள்ளது.

இதன்பின்னரே, தென்கொரியாவின் சட்ட விதிகளுக்கு உட்பட்ட Open AI நிறுவனத்திற்கு அந்நாட்டு அமைச்சகம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தரவுகள் பொதுவெளியில் கசியவிடப்பட்ட 24 மணிநேரத்தில் கண்டறிந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும், தங்களது தரப்பில் தேவையான மேம்பாடுகளை மேற்கொள்வதாகவும் Open AI நிறுவனம் தென்கொரிய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.