2024 Paris Olympics Badminton: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டி.. பிவி சிந்து என்ன பிரிவு தெரியுமா?!

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு போட்டி தரவரிசையில் 10-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

2024 Paris Olympics Badminton: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டி.. பிவி சிந்து என்ன பிரிவு தெரியுமா?!
PV Sindhu (Photo Credit: @airnewsalerts X)

ஜூலை 15, மும்பை (Mumbai): பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 11ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி (Paris Olympics) நடைபெற உள்ளது. இதற்கான துவக்க விழா வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய அணிக்கு தலைவராக துப்பாக்கிச்சுடும் வீரர் ககன் நரங் (Gagan Narang) தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் விழாவில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலுடன் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் இணைந்து இந்திய அணி சார்பில் தேசிய கொடியை ஏந்திச் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீராங்கனைகள்: இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 28 தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில், தமிழ்நாட்டில் இருந்து பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வீரரான ஆல்ட்ரின், வித்யா ராம்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம், ஒலிம்பிக் வரலாற்றிலேயே தடகளத்தில் ஆறு வீரர்கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும். Tata Curvv Launch Date Announced: டாடா கர்வ் கார் எப்போது ரிலீஸ்?! அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன.? விபரம் உள்ளே..!

பிவி சிந்து போட்டி தரவரிசை: இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் பாட்மிண்டனில் (Badminton) மகளிர் ஒற்றையர் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உலகத் தரவரிசையில் 13-வது இடம் வகிக்கும் சிந்து (PV Sindhu), ‘எம்’ பிரிவில் இடம் பெற்றுள்ளார். அவருடன் 75-ம் நிலைவீராங்கனையான எஸ்டோனியாவின் கிறிஸ்டின் குபா, 111-ம் நிலை வீராங்கனையான மாலத்தீவுகளின் பாத்திமத் நாபாஹா அப்துல் ரசாக் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இதனால் சிந்து எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடும்.

(The above story first appeared on LatestLY on Jul 15, 2024 12:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).