BAN Vs PAK 2nd T20I, Toss: பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு..!

வங்கதேசம் எதிர் பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

BAN Vs PAK 2nd T20I, Toss (Photo Credit: @ESPNcricinfo X)

ஜூலை 22, தாக்கா (Sports News): பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அனைத்து போட்டிகளும், தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும். இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை ஃபேன் கோட் செயலியில் நேரலையில் பார்க்கலாம். நடந்து முடிந்த முதலாவது டி20 போட்டியில், வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. BAN Vs PAK 2nd T20I: வங்கதேசம் - பாகிஸ்தான் 2வது டி20.. வெல்ல போவது யார்..?

வங்கதேசம் எதிர் பாகிஸ்தான் (Bangladesh Vs Pakistan):

இந்நிலையில், இன்று (ஜூலை 22) வங்கதேசம் - பாகிஸ்தான் (BAN Vs PAK) அணிகள் மோதும் 2வது டி20 போட்டி தாக்காவில் நடைபெறுகிறது. லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி, சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 23 சர்வதேச டி20 போட்டிகளில் மோதியுள்ளன. வங்கதேச அணி 4 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 19 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

வங்கதேசம் (பிளேயிங் லெவன்):

பர்வேஸ் ஹொசைன் எமன், முகமது நைம், லிட்டன் தாஸ் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், ஜேக்கர் அலி, ஷமிம் ஹொசைன், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்.

பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்):

ஃபகார் ஜமான், சைம் அயூப், முகமது ஹாரிஸ், சல்மான் ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், குஷ்தில் ஷா, அப்பாஸ் அப்ரிடி, ஃபஹீம் அஷ்ரப், சல்மான் மிர்சா, அகமது டேனியல்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement