SL Vs BAN 1st Test, Day 2: வலுவான நிலையில் வங்கதேசம்.. முஷ்பிகுர் ரஹீம் சதமடித்து அசத்தல்..!
இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், வங்கதேச அணி 151 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 484 ரன்கள் அடித்துள்ளது.
ஜூன் 18, காலி (Sports News): வங்கதேசம் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (SL Vs BAN Test Series 2025) விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 17 முதல் ஜூன் 21ஆம் தேதி வரையும், 2வது டெஸ்ட் போட்டி, ஜூன் 25 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரை, சோனி லிவ் தொலைக்காட்சி, பேன்கோடு இணையதளம் மற்றும் ஆப்பில் நேரலையில் (SL Vs BAN Test Live Streaming) பார்க்கலாம். நேற்று (ஜூன் 17) முதல் டெஸ்ட் போட்டி (SL Vs BAN 1st Test) இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். SL Vs BAN 1st Test, Day 1: சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம் அபார சதம்.. சோர்வடைந்த இலங்கை பவுலர்கள்..!
இலங்கை எதிர் வங்கதேசம் (Sri Lanka Vs Bangladesh):
அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணிக்கு அனாமுல் ஹக் 10 பந்துகள் விளையாடி 0 ரன்னிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷத்மான் இஸ்லாம் 53 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டாகினர். தொடர்ந்து, மொமினுல் ஹக் 29 ரன்னில் நடையை கட்டினார். இதனையடுத்து, கேப்டன் சாண்டோ மற்றும் அனுபவம் வாய்ந்த முஷ்பிகுர் ரஹீம் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக விளையாடி சதமடித்து அசத்தினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில், வங்கதேச அணி 90 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 292 ரன்கள் அடித்துள்ளது. சாண்டோ 260 பந்துகளில் 136* ரன்கள், முஷ்பிகுர் ரஹீம் 186 பந்துகளில் 105* ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
வங்கதேசம் அபாரமான பேட்டிங்:
இந்நிலையில், இன்று 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் சாண்டோ 148 ரன்களில் அவுட்டாகினர். அடுத்து முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ் உடன் இணைந்து ரன்களை சேர்த்தார். 130 ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால் 2 மணிநேரத்திற்கும் மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதன்பின்னர், முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்னிலும், லிட்டன் தாஸ் 90 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, வங்கதேச அணி 151 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 484 ரன்கள் அடித்துள்ளது. போதிய வெளிச்சமின்மை காரணமாக 2ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
(The above story first appeared on LatestLY on Jun 18, 2025 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

