BAN Vs NED 3rd T20I, Toss: வங்கதேசத்திற்கு எதிரான 3வது டி20.. நெதர்லாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு.., ஆறுதல் வெற்றி பெறுமா..?

வங்கதேசம் எதிர் நெதர்லாந்து (BAN Vs NED T20I) அணிகள் மோதும் 3வது டி20 போட்டியில், நெதர்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

BAN Vs NED 3rd T20I, Toss (Photo Credit: @cricketangon X)

செப்டம்பர் 03, சில்ஹெட் (Sports News): நெதர்லாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதலாவது டி20 போட்டியில், வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டியிலும், வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2-0 என தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், வங்கதேசம் - நெதர்லாந்து (BAN Vs NED) அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, இன்று (செப்டம்பர் 03) சில்ஹெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ZIM Vs SL 1st T20I, Toss: ஜிம்பாப்வே - இலங்கை முதலாவது டி20 போட்டி.. இலங்கை டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

வங்கதேசம் எதிர் நெதர்லாந்து (Bangladesh Vs Netherlands):

லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 6 டி20ஐ போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், வங்கதேச அணி 5 போட்டிகளிலும், நெதர்லாந்து அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

வங்கதேசம் அணி வீரர்கள்:

லிட்டன் தாஸ் (கேப்டன்), சைஃப் ஹாசன், தவ்ஹித் ஹிரிடோய், ஜேக்கர் அலி, ஷமிம் ஹொசைன், நூருல் ஹசன், தன்சிம் ஹசன் சாகிப், ரிஷாத் ஹொசைன், முகமது சைபுதீன், நசும் அகமது, ஷோரிபுல் இஸ்லாம்.

நெதர்லாந்து அணி வீரர்கள்:

மேக்ஸ் ஓடோவ்ட், விக்ரம்ஜித் சிங், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), ஷாரிஸ் அகமது, நோவா குரோஸ், டிம் பிரிங்கிள், கைல் க்ளீன், ஆர்யன் தத், பால் வான் மீகெரென், டேனியல் டோரம்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement