ZIM Vs SL 1st T20I, Toss (Photo Credit: @ZimCricketv X)

செப்டம்பர் 03, ஹராரே (Sports News): இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், நடந்து முடிந்த ஒருநாள் தொடரில், இலங்கை அணி 2-0 என ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து, ஜிம்பாப்வே - இலங்கை (ZIM Vs SL) அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி, இன்று (செப்டம்பர் 03) இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகிறது. PAK Vs AFG: இப்ராஹிம் சத்ரான் - செடிகுல்லா அடல் இணை அபாரம்.. பாகிஸ்தான் வெற்றிக்கு 170 ரன்கள் இலக்கு..!

ஜிம்பாப்வே எதிர் இலங்கை (Zimbabwe Vs Sri Lanka):

சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகள் இதுவரை 6 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஜிம்பாப்வே அணி 1 போட்டியிலும், இலங்கை அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20ஐ தொடரை பேன்கோட் செயலி மூலம் நேரலையில் பார்க்கலாம். இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஜிம்பாப்வே அணி வீரர்கள்:

பிரையன் பென்னட், தடிவானாஷே மருமணி, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா (கேப்டன்), ரியான் பர்ல், டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, பிராட் எவன்ஸ், டினோடென்டா மபோசா, ரிச்சர்ட் நகரவா, பிளஸ்ஸிங் முசரபானி.

இலங்கை அணி வீரர்கள்:

பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, சரித் அசலங்கா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, மஹீஸ் தீக்ஷன, நுவன் துஷார.