BAN Vs WI 1st T20I, Toss: வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டி20ஐ.. டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு..!

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

BAN Vs WI 1st T20I, Toss: வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டி20ஐ.. டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு..!
BAN Vs WI 1st T20I, Toss (Photo Credit: @_mkverma X)

அக்டோபர் 27, சட்டோகிராம் (Sports News): வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒருநாள் தொடரை, வங்கதேச அணி 2-1 என கைப்பற்றியது. இந்நிலையில், வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டி, இன்று (அக்டோபர் 27) சட்டோகிராமில் நடைபெறுகிறது. லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி, ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. Shreyas Iyer: இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு விலா எலும்பில் காயம்.. ஐசியூவில் அனுமதி.!

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் (Bangladesh Vs West Indies):

ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி டி20ஐ தொடரை கைப்பற்ற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், வங்கதேச அணி சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்த போராடும். இவ்விரு அணிகளும் இதுவரை 19 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், வங்கதேச அணி 8 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகளுக்கு முடிவில்லை. இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

வங்கதேச அணி வீரர்கள்:

லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், சைஃப் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், நூருல் ஹசன், ஷமிம் ஹொசைன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:

பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், ஷாய் ஹோப் (கேப்டன்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ், ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், அகேல் ஹொசைன், காரி பியர், ஜேடன் சீல்ஸ்.

(The above story first appeared on LatestLY on Oct 27, 2025 05:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).