அக்டோபர் 27, சிட்னி (Sports News): இந்திய தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி (Australia National Cricket Team) 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், இறுதிப்போட்டி நேற்று முன்தினம் அங்குள்ள சிட்னி நகரில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 46.4 ஓவர்கள் முடிவில் 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் வீரர்கள் அதிரடியாக விளையாடிய நிலையில், இறுதி போட்டியில் இந்தியா திரில் வெற்றியடைந்தது. IND Vs AUS: பொளந்துகட்டிய ரோஹித் சர்மா & விராட் கோலி.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி.. இந்தியா திரில் வெற்றி..!
இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) மருத்துவமனையில் அனுமதி:
இந்திய அணியின் சார்பில் விளையாடிய ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இதனிடையே ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் அடித்த பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று கேட்ச் பிடித்து அசத்தினார். அப்போது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்த நிலையில், அவரது விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வலியால் துடித்த நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். பிசிசிஐ தரப்பில் விலா எலும்பில் காயம் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விலா எலும்பு காயத்தால் ரத்தக்கசிவு:
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் இருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு விலா எலும்பு காயம் காரணமாக மார்பு பகுதிக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் ஐசியூவில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தீவிர சிகிச்சையில் ஸ்ரேயாஸ் ஐயர்:
🚨 BCCI PRESS RELEASE ON SHREYAS IYER 🚨 pic.twitter.com/YNV7we5hHT
— Johns. (@CricCrazyJohns) October 27, 2025