BAN Vs WI, 1st T20I: முதல் டி20யில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.. வங்கதேச அணி சொதப்பல்..!

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதலாவது டி20ஐ போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

BAN Vs WI, 1st T20I: முதல் டி20யில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.. வங்கதேச அணி சொதப்பல்..!
Bangladesh Vs West Indies, 1st T20I (Photo Credit: @windiescricket X)

அக்டோபர் 27, சட்டோகிராம் (Sports News): வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒருநாள் தொடரை, வங்கதேச அணி 2-1 என கைப்பற்றியது. இந்நிலையில், வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதலாவது டி20ஐ போட்டி, இன்று (அக்டோபர் 27) சட்டோகிராமில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். BAN Vs WI, 1st T20I: ஷாய் ஹோப், ரோவ்மேன் பவல் அதிரடி பேட்டிங்.. வங்கதேசம் வெற்றி பெற 166 ரன்கள் இலக்கு..!

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் (Bangladesh Vs West Indies):

அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 46* ரன்கள், ரோவ்மேன் பவல் 44* ரன்கள் அடித்தனர். வங்கதேச அணி சார்பில் தஸ்கின் அகமது 2, ரிஷாத் ஹொசைன் 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 19.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக தன்சிம் ஹசன் சாகிப் 33 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேடன் சீல்ஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேச அணி வீரர்கள்:

லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், சைஃப் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், நூருல் ஹசன், ஷமிம் ஹொசைன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:

பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், ஷாய் ஹோப் (கேப்டன்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ், ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், அகேல் ஹொசைன், காரி பியர், ஜேடன் சீல்ஸ்.

(The above story first appeared on LatestLY on Oct 27, 2025 09:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).