BAN Vs WI, 1st T20I (Photo Credit: @ESPNcricinfo X)

அக்டோபர் 27, சட்டோகிராம் (Sports News): வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒருநாள் தொடரை, வங்கதேச அணி 2-1 என கைப்பற்றியது. இந்நிலையில், வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டி, இன்று (அக்டோபர் 27) சட்டோகிராமில் நடைபெறுகிறது. லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி, ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. BAN Vs WI 1st T20I, Toss: வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டி20ஐ.. டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு..!

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் (Bangladesh Vs West Indies):

இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 46* ரன்கள், ரோவ்மேன் பவல் 44* ரன்கள் அடித்தனர். வங்கதேச அணி சார்பில் தஸ்கின் அகமது 2, ரிஷாத் ஹொசைன் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

வங்கதேச அணி வீரர்கள்:

லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், சைஃப் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், நூருல் ஹசன், ஷமிம் ஹொசைன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:

பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், ஷாய் ஹோப் (கேப்டன்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ், ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், அகேல் ஹொசைன், காரி பியர், ஜேடன் சீல்ஸ்.