BAN Vs WI, 3rd ODI: ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்.. 179 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி..!
வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியில், வங்கதேச அணி 179 ரன்கள் வித்தியசாத்தில் இமாலய வெற்றி பெற்றது.
அக்டோபர் 23, டாக்கா (Sports News): வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில், வங்கதேச அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி, டாக்காவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. AUS Vs IND 2nd ODI: இந்தியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. ஆஸ்திரேலியா அபார வெற்றி..!
வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் (Bangladesh Vs West Indies):
அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 296 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சைஃப் ஹாசன் 80 ரன்கள், சௌமியா சர்க்கார் 91 ரன்கள் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் அகேல் ஹொசைன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 30.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணி சார்பில் நசும் அகமது, ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்கள், மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் தன்வீர் இஸ்லாம் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதன்மூலம் வங்கதேச அணி 179 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
வங்கதேச அணி வீரர்கள்:
சைஃப் ஹாசன், சௌமியா சர்க்கார், டவ்ஹித் ஹ்ரிடோய், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மஹிதுல் இஸ்லாம் அன்கான், மெஹிதி ஹசன் மிராஸ் (கேப்டன்), நசும் அகமது, நூருல் ஹசன், ரிஷாத் ஹொசைன், தன்வீர் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:
அலிக் அதானாஸ், பிராண்டன் கிங், கீசி கார்டி, அக்கீம் அகஸ்டே, ஷாய் ஹோப் (கேப்டன்), ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், குடாகேஷ் மோதி, ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், அகேல் ஹொசைன், காரி பியர்.
(The above story first appeared on LatestLY on Oct 23, 2025 07:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

