அக்டோபர் 23, அடிலெய்டு (Sports News): இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆஸ்திரேலியா - இந்தியா (AUS Vs IND ODI) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று (அக்டோபர் 23) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். INDW Vs NZW: நியூசி டாஸ் வென்று பௌலிங் தேர்வு.. இந்தியா பெண்கள் Vs நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடக்கம்.!
ஆஸ்திரேலியா எதிர் இந்தியா ஒருநாள் தொடர் (Australia Vs India):
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 264 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 73 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 61 ரன்கள், அக்சர் படேல் 44 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா 4, சேவியர் பார்ட்லெட் 3, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 46.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 265 ரன்கள் அடித்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 74, கூப்பர் கோனொலி 61* ரன்கள் அடித்தனர். இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், மாட் ரென்ஷா, அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, மிட்செல் ஓவன், சேவியர் பார்ட்லெட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.