BAN Vs WI 3rd T20I, Toss: வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் 3வது டி20ஐ.. வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டி20ஐ போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

BAN Vs WI 3rd T20I, Toss: வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் 3வது டி20ஐ.. வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
BAN Vs WI 3rd T20I, Toss (Photo Credit: @BCBtigers X)

அக்டோபர் 31, சட்டோகிராம் (Sports News): வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒருநாள் தொடரை, வங்கதேச அணி 2-1 என கைப்பற்றியது. இதனையடுத்து, நடைபெற்ற முதலிரண்டு டி20ஐ போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டி20ஐ போட்டி, இன்று (அக்டோபர் 31) சட்டோகிராமில் நடைபெறுகிறது. IND Vs AUS, 2nd T20I: இந்தியா - ஆஸ்திரேலியா 2வது டி20ஐ.. ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

வங்கதேசம் எதிர் வெஸ்ட் இண்டீஸ் (Bangladesh Vs West Indies):

லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி, ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், வங்கதேச அணி 8 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகளுக்கு முடிவில்லை. இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

வங்கதேச அணி வீரர்கள்:

சைஃப் ஹாசன், டான்சித் ஹசன் தமீம், லிட்டன் தாஸ் (கேப்டன்), பர்வேஸ் ஹொசைன் எமன், நூருல் ஹசன், ஜாக்கர் அலி, மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, நாசும் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:

பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், அக்கீம் அகஸ்டே, ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), அமீர் ஜாங்கூ, ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், குடகேஷ் மோட்டி, அகேல் ஹொசைன், காரி பியர்.

(The above story first appeared on LatestLY on Oct 31, 2025 05:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).