IND Vs AUS, 2nd T20I (Photo Credit: @ESPNcricinfo X)

அக்டோபர் 31, மெல்போர்ன் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒருநாள் தொடரில், இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 2-1 என தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து, முதலாவது டி20ஐ போட்டி, மழைக்காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா (IND Vs AUS T20I) அணிகள் மோதிய 2வது டி20ஐ போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்டோபர் 31) நடைபெற்றது. IND Vs AUS: 126 ரன்கள் இலக்கு.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் தடுமாற்றம்.. தவித்துப்போன வீரர்கள்.!

இந்தியா எதிர் ஆஸ்திரேலியா டி20ஐ தொடர் (India Vs Australia T20I Series 2025):

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்கள், ஹர்ஷித் ராணா 35 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். ஆஸ்திரேலியா சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4 ஓவர்கள் பந்துவீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 13.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 126 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 46 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னேமன், ஜோஷ் ஹேசில்வுட்.

இந்திய அணி வீரர்கள்:

அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.