ஜூன் 08, டல்லாஸ் (Sports News): ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரில் இன்று நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் இலங்கை-வங்காளதேசம் (SL Vs BAN) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. Astronaut William Anders: பூமியின் உதயத்தை புகைப்படம் எடுத்த அமெரிக்க விண்வெளி வீரர் விபத்தில் மரணம்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இதனையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் நிதானமாக விளையாடியது. பின், சீரான இடைவெளியில் விக்கெட்களையும் இழந்து ரன்களை குவிக்க முடியாமல், 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 124 ரன்களை மட்டுமே அடித்தனர். அதிகபட்சமாக பதும் நிசங்கா 47 ரன்கள் அடித்தார். வங்காளதேச அணியில் ரிஷாத் ஹூசைன் முக்கியமான 3 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர், 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும், மிடில் ஓவர்களில் சற்று அதிரடி காட்டினர். பின்னர், அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வங்காளதேச அணி தடுமாறியது.
விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் வங்காளதேச அணி 125 ரன்களை 19 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்த நிலையில் த்ரில் வெற்றி பெற்றது. வங்காளதேச அணி தரப்பில், டவ்ஹித் ஹிர்தாய் 20 பந்துகளில் 40 ரன்களை அடித்தார். இலங்கை அணி சார்பில் நுவான் துஷாரா 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதை வங்காளதேச அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரிஷாத் ஹூசைன் பெற்று சென்றார்.
The 21-year-old shined bright 🌟
Rishad Hossain wins the @aramco POTM award thanks to an incredible spell of spin bowling.#T20WorldCup pic.twitter.com/9caqlERKvb
— ICC (@ICC) June 8, 2024