
மே 24, மும்பை (Sports News): ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027 (ICC World Test Championship 2025) போட்டிகளுக்காக, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து (India's Tour to England) சென்று விளையாடவுள்ளது. இங்கிலாந்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இப்போட்டிகள் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்குள்ள லீட்ஸ், பிரிமிங்கம், லண்டன், மான்செஸ்டர் மைதாங்களில் போட்டிகள் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பை பிசிசிஐ தலைமை (BCCI Headquarters) அலுவலகத்தில், பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா (BCCI Secretary Devajit Saikia) தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. RCB Vs SRH: இறுதி கட்டத்தில் சொதப்பிய ஆர்சிபி.. 42 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி..!
இந்திய தேசிய கிரிக்கெட் அணி அறிவிப்பு (Indian National Cricket Team):
அதனைத்தொடர்ந்து, தற்போது இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியை ஷுப்மன் ஹில் கேப்டனாக வழிநடத்துகிறார். அணியில் சுப்மன் கில், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தக்ருரா, ஷர்துல் தக்ருரா. சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 20 ஜூன் 2025ல் தொங்கும் போட்டி 31 ஜூலை 2025ல் நிறைவுபெறுகிறது.
இங்கிலாந்து போட்டிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு:
Shubman Gill-led #TeamIndia are READY for an action-packed Test series 💪
A look at the squad for India Men’s Tour of England 🙌#ENGvIND | @ShubmanGill pic.twitter.com/y2cnQoWIpq
— BCCI (@BCCI) May 24, 2025