RCB Vs SRH: இறுதி கட்டத்தில் சொதப்பிய ஆர்சிபி.. 42 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி..!

ஐபிஎல் 2025 தொடரில், சன்ரைசர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் (Sunrisers vs Royal Challengers) போட்டியில், ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

RCB Vs SRH: இறுதி கட்டத்தில் சொதப்பிய ஆர்சிபி.. 42 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி..!
RCB Vs SRH (Photo Credit: @IPL X)

மே 23, லக்னோ (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரில், இன்று (மே 23) 65வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (RCB Vs SRH, Match 65) அணிகள் மோதின. பெங்களூருவில் தொடர் மழை காரணமாக, லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் போட்டி நடைபெற்றது. ஏற்கனவே, குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. RCB Vs SRH: பவர்பிளே ஓவர்களில் வெளுத்துவாங்கிய ஆர்சிபி.. 72/0 ரன்கள் குவிப்பு..!

சன்ரைசர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் (Sunrisers vs Royal Challengers):

இந்நிலையில், இன்றைய போட்டியில் ஜித்தேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு‍ அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா 34, ட்ராவிஸ் ஹெட் 17 ரன்னில் அதிரடியான தொடக்கம் கொடுத்து அவுட்டாகினர். அடுத்து வந்த கிளாசன் 24 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 94 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 231 ரன்கள் குவித்தது.

ஆர்சிபி தோல்வி:

ஆர்சிபி அணி வெற்றி பெற 232 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தியது. அதன்படி, விராட் கோலி - பில் சால்ட் ஜோடி அதிரடியான தொடக்கம் கொடுத்தது. பவர் பிளேயின் 6 ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் 72 ரன்கள் குவித்தது. அதன் பிறகு, விராட் கோலி 43 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, சால்ட் மட்டும் அதிரடியாக விளையாடி 62 ரன்களில் அவுட் ஆகினார். இறுதியில், ஆர்சிபி அணி 19.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

(The above story first appeared on LatestLY on May 23, 2025 11:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).