Team India: உலகளவில் சிறந்த டெஸ்ட் அணியில் இந்தியா நம்பர் 1 இடத்தை பிடித்தது.. கொண்டாட்டத்தில் இந்தியர்கள்.!
Team India 2023 | T20 WorldCup (Photo Credit: BCCI)

மே 02, புதுடெல்லி (Sports News): இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள ஓவல் மைதானத்தில் வைத்து ஜூன் மாதம் நடைபெறுகிறது. இதற்காக ஜூன் மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு செல்லவுள்ளது.

சர்வதேச அளவில் நடைபெற்ற பல்வேறு டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றி அடைந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதியாக இங்கிலாந்தில் மோதிக்கொள்ளவுள்ள நிலையில், இந்த போட்டி யார் சாம்பியன் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. Go First: 2 நாட்கள் விமான சேவையை முற்றிலும் ரத்து செய்தது Go First நிறுவனம்.. பணத்தட்டுப்பாடால் பரபரப்பு அறிவிப்பு.!

இந்த நிலையில், இந்திய அணி சர்வதேச அளவில் சிறந்து விளங்கிய டெஸ்ட் அணி என்ற ஆஸ்திரேலியாவின் பட்டத்தை தனதாக்கி இருக்கிறது. இதன் மூலமாக இந்திய அணி உலகளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த தகவலை பிசிசிஐ தலைமை இயக்குனர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணியின் சார்பில் ரோஹித் ஷர்மா, சுப்னம் ஹில், சேடேஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி, ரஹானே, கே.எல் ராகுல், கே.எஸ் பாரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷரத்துள் தாகூர், முகம்மது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.