மே 02, புது டெல்லி (India News): மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் Wadia Group நிறுவனம், Go First விமான போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் 57 விமானங்கள் பல்வேறு நகரங்களை இணைத்து விமான போக்குவரத்தை உறுதி செய்கிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே Go First நிறுவனத்தின் விமானங்கள் தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்துள்ளன. அதுமட்டுமல்லாது, விமான எரிபொருள் வழங்கும் நிறுவனங்களிடம் பண நெருக்கடி காரணமாக எரிபொருள்களுக்கான பணங்கள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. NCP Sharad Pawar: தலைவர் பதவியில் இருந்து விலகிய சரத் பவார்.. தொண்டர்கள் போர்க்கொடி, தலைமை அலுவலகத்தில் போராட்டம்.!
அமெரிக்காவில் இருந்து வரவேண்டிய என்ஜின்களும் வரவில்லை. இதனால் தொடர் பிரச்சனைகளை சந்தித்து வந்த Go First நிறுவனம், மே மாதம் 3ம் தேதி மற்றும் 4ம் தேதியில் தனது விமானங்கள் இயங்காது என மத்திய வான்வழி போக்குவரத்து அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
மேற்கூறிய 2 நாட்களுக்கான முன்பதிவுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், 5ம் தேதிகள் முன்பதிவுகளை பொறுத்து மேற்படி நடவடிக்கை எடுக்கலாம் என தெரியவருகிறது. ஒருவேளை விமான துறையில் Go First நிறுவனம் வெளியேற முற்பட்டால், அதன் 5 ஆயிரம் பணியாளர்களின் நிலைமை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
விமானங்களுக்கு எரிபொருள் என்பது கிலோ லிட்டர் அளவில் வழங்கப்படுகிறது. 1 கிலோ லிட்டர் அளவுள்ள (1000 லிட்டர்) எரிபொருள் விலை டெல்லியில் இந்திய மதிப்பில் (Indian Oil) ரூ.95,935 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலையும் சென்னை, கொல்கத்தா, மும்பை என நகரங்களை பொறுத்து மாறுபடுகிறது.