IND Vs SA Test Series: இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான டெஸ்ட் தொடருக்கு தீவிரமாக பயிற்சியெடுக்கும் ரோஹித் சர்மா..!
டி20 தொடர் சமன் செய்யப்பட, ஒருநாள் போட்டியில் இந்தியா தொடரை கைப்பற்றிய நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.
டிசம்பர் 25, ஜோக்கன்ஸ்பர்க் (Cricket News): தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை தென்னாபிரிக்க அணிக்கு எதிராக சமன் செய்தது. அதனைத்தொடர்ந்து, நடைபெற்ற 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று அத்தொடரை கைப்பற்றியது. நாளை முதல் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. Santa Claus Sand Art: 2 டன் வெங்காயத்தில் உருவான சாண்டா கிளாஸ்: உலக சாதனை படைத்த மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக்.!
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி: இதற்காக இந்திய அணியின் வீரர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். அதேபோல, தனது சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்து வரும் தென்னாபிரிக்க அணி, டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் பயிற்சி எடுக்கிறது. இந்திய அணியை ரோகித் சர்மா வழி நடத்துகிறார். அவரின் தலைமையில் உள்ள இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன், ருத்ராஜ் கைக்வாட், ஷ்ரேயஸ் ஐயர், சுப்னம் ஹில், விராட் கோலி, யாஷ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், கே.எல் ராகுல், ஸ்ரீ காந்த் பரத், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். Minors Kill Sexual Assaulter: பாலியல் பலாத்காரம் செய்ததால் ஆத்திரம்: 25 வயது நபர் கொலை., உடல் எரிப்பு: 3 சிறார்கள் பரபரப்பு சம்பவம்.!
தீவிர பயிற்சியில் ரோஹித்: நாளை மதியம் 01:30 மணிக்கு இந்திய நேரப்படி இந்த ஆட்டம் அங்குள்ள கௌட்டாங்க மாகாணம் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இதனை நேரலையில் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா ஆகிய செயலிகளிலும், ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சிகள் நேரில் நேரலைகள் காணலாம். இந்நிலையில், ரோஹித் சர்மா களத்திற்கு திரும்பி பயிற்சி எடுக்கும் வீடியோ காட்சிகளை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.
It is time for the Test series and Captain Rohit Sharma is READY! 💪🏾🙌🏽#TeamIndia | @ImRo45 | #SAvIND pic.twitter.com/EYwvGjuKGw
— BCCI (@BCCI) December 24, 2023
(The above story first appeared on LatestLY on Dec 25, 2023 09:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

