Ruturaj Gaikwad to Captain CSK in IPL 2024: எதே.. "தல"க்கு தலைமை பொறுப்பு இல்லையா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. அப்போ யார் கேப்டன்?.!

ஐபிஎல் 2024க்கு எம்எஸ் தோனிக்கு பதிலாக சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Ruturaj Gaikwad to Captain CSK in IPL 2024: எதே..
MS Dhoni & Ruturaj Gaikwad (Photo Credit: @Troll_Cinema X)

மார்ச் 21, புதுடெல்லி (New Delhi): கிரிக்கெட் ரசிகர்களால் பெருவாரியாக எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டிகள், நாளை முதல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலும் நடைபெறவுள்ளதால், முதல் 22 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே ஐபிஎல் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 10 அணிகள் மோதிக்கொள்ளும் போட்டித்தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கும் முதல் போட்டியில், சென்னை மற்றும் பெங்களூர் (CSK Vs RCB) அணிகள் நாளை மோதுகின்றன. MS Dhoni Looks For IPL 2024: “வந்துட்டான் டா.. வந்துட்டான் டா.. காளை..” புதிய லுக்கில் விண்டேஜ் தோனி..!

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் புதிய கேப்டனாக எம்எஸ் தோனிக்கு (MS Dhoni) பதிலாக தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அணியின் கேப்டனாக இந்த 14 ஆண்டுகளும் தோனி செயல்பட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என ரசிகர்கள் கருதி வந்தனர். இந்நிலையில் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக தோனி தனது முகநூல் பக்கத்தில் இந்த சீசனில் தான் ஒரு புதிய ரோலில் செயல்படவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதைவைத்தே சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகவுள்ளார் என ரசிகர்கள் மத்தியில் புகைச்சல் கிளம்பியது. இதனை உறுதி செய்யும் வகையில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

(The above story first appeared on LatestLY on Mar 21, 2024 04:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).