MS Dhoni Looks For IPL 2024: "வந்துட்டான் டா.. வந்துட்டான் டா.. காளை.." புதிய லுக்கில் விண்டேஜ் தோனி..!

ஐபிஎல் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் யே ட்ரெண்டாகி வருகிறது.

MS Dhoni Looks For IPL 2024:
MS Dhoni (Photo Credit: @AalimHakim X)

மார்ச் 21, புதுடெல்லி (New Delhi): கிரிக்கெட் ரசிகர்களால் பெருவாரியாக எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டிகள், இம்மாதம் 22ம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. 2024 மக்களவை தேர்தலும் நடைபெறவுள்ளதால், முதல் 22 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே ஐபிஎல் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 10 அணிகள் மோதிக்கொள்ளும் போட்டித்தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கும் முதல் போட்டியில், சென்னை மற்றும் பெங்களூர் (CSK Vs RCB) அணிகள் மோதுகின்றன. Woman Arrested For Faking As Railway Cop: "ஏய்.. நான் போலீஸ்.." எந்த நாடகத்தில்னு கண்டுபிடித்த மாப்பிள்ளை..!

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி (MS Dhoni) தனது ஹேர்ஸ்டைலில் சிறிய மாற்றங்கள் செய்து சிறியளவில் ட்ரின் செய்த தாடி வைத்து புதிய லுக்கிற்கு மாறியுள்ளார். தோனியின் ஆஸ்தான ஹேர்ஸ்டைலிஸ்டான ஆலிம் ஹக்கிம் (Aalim Hakim), புதிய லுக்கிற்கு மாற்றியுள்ளார். தற்போது விண்டேஜ் ஹேர்ஸ்டைலிலேயே வேறு மாதிரியான லுக்கிற்கு வந்துள்ளார் தோனி. இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இந்த லுக் பார்க்க காளை பட சிம்பு போன்று உள்ளது என சிம்பு ரசிகர்கள் டபுளாக கொண்டாடி வருகிறார்கள்.

(The above story first appeared on LatestLY on Mar 21, 2024 03:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).