David Warner: "மீண்டும் களத்தில் இறங்க தயார்" ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் தகவல்.!
தேவைப்பட்டால் ஓய்வில் இருந்து திரும்பி வந்து எனது அணிக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 23, சிட்னி (Sports News): ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆட்டக்காரரான டேவிட் வார்னர் (David Warner), அந்த அணியை கேப்டனாகவும் கடந்த காலங்களில் வழிநடத்தி இருக்கிறார். பல சர்வதேச அளவிலான போட்டிகளில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அவர், இடது கை பேட்டிங்கில் வல்லவர் ஆவார். அதேபோல, வலது கை பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுபவார்.
அதிரடி ஆட்டக்காரர்: முந்தைய காலங்களில் ஆஸ்திரேலியாவில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்து வந்த வார்னர், தனது அணிக்காக அதிரடியாக ரன்கள் குவித்த நாயகர்களில் கவனிக்கத்தக்கவர் ஆவார். கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கிய அவரின் கிரிக்கெட் வாழ்க்கை, தற்போது வரை தொடர்ந்து வருகிறது. தனது 13 வயதில் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை தொடர்ந்து, அதனுள் தன்னை முழு ஈடுபாடுடன் செயல்படுத்திய வார்னர் இன்று நாடுகள் கடந்து பலராலும் ரசிக்கப்படும் வீரராகவும் இருந்து வருகிறார். TN Champions Foundation: பாரா ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடி ரூபாய் ஊக்கத்தொகை.. தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் அதிரடி..!
வார்னர் ஓய்வு: கடந்த சில மாதங்களுக்கு முன்பு டி20 தொடர் மற்றும் 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டிகளில் இருந்து வார்னர் ஓய்வை அறிவித்தார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு, தனது 37 வயதில் இந்த ஓய்வை அறிவித்தார். கடந்த உலகக் கோப்பை போட்டியின் போது, வார்னர் அதிக ரன்களை தனது அணிக்காக சேர்த்திருந்தார். 159 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், 6,938 ரன்கள் குவித்துள்ளார். இதில் 22 சதங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போது வார்னர் ஆஸிதிரேலியா அணி நிர்வாகத்துக்குத் தூது விடும் விதமாகப் பேசியுள்ளார். அதில் “உண்மையாக அவர்கள் என்னை விரும்பினால், நான் மீண்டும் அணிக்குத் திரும்ப ஆவலாக உள்ளேன். நான் சரியான காரணத்துக்காகவே ஓய்வு பெற்றேன். ஆனால் அவர்களுக்கு நான் தேவைப்பட்டால் கண்டிப்பாக நான் அதற்கும் தயாராக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
(The above story first appeared on LatestLY on Oct 23, 2024 01:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

