TN Champions Foundation (Photo Credit: @TNDIPRNEWS X)

அக்டோபர் 23, சென்னை (Sports News): மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (TN Dy CM Udhayanidhi Stalin) அவர்கள், நேற்று (அக்டோபர் 22) தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை (Tamilnadu Champions Foundation) மூலமாக விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு அதிநவீன பந்தய சைக்கிள்கள் மற்றும் போட்டிகளில் கலந்து கொள்ளும் செலவினத்திற்கான தொகை என 13 விளையாட்டு வீரர், வீராங்கனைளுக்கு மொத்தம் 1,00,36,312 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். IND Vs NZ: களத்தை நேரில் வந்து சோதனையிட்ட ரோஹித் சர்மா, கெளதம் காம்பிர்.. இந்தியா - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயார்.!

கடந்த 3 ஆண்டுகளாக 3,350 விளையாட்டு வீரர்களுக்கு, சுமார் 110 கோடி ரூபாய் அளவிற்கு ஊக்கத்தொகை (Incentives) வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளார். மேலும், 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து 6 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில், 4 பேர் பதக்கம் வென்று வந்தனர். அவர்களுக்கு மொத்தம் 5 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார்.

தாய்லாந்தின் சோங்க்லாவில் 01.12.2024 முதல் 07.12.2024 வரை நடைபெறவுள்ள உலக திறன் இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ள 7 தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரர்களுக்கு, விமான கட்டணம், தங்குமிடம் மற்றும் போட்டிக்கான நுழைவு கட்டணத்திற்கான ரூ. 11,73,900 காசோலையை வழங்கி சிறப்பித்தார்.