Robin Minz Meets With An Accident: சாலை விபத்தில் சிக்கிய இளம் ஐபிஎல் கிரிக்கெட் வீரர்.. சோகத்தில் குஜராத் டைட்டன்ஸ்..!

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர் ராபின் மின்ஸ் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது.

Robin Minz Meets With An Accident: சாலை விபத்தில் சிக்கிய இளம் ஐபிஎல் கிரிக்கெட் வீரர்.. சோகத்தில் குஜராத் டைட்டன்ஸ்..!
Robin Minz (Photo Credit: @FinallyLiveNews X)

மார்ச் 04, ஜார்கண்ட் (Jharkhand): ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான விக்கெட் கீப்பர் ராபின் மின்ஸ் (Robin Minz) (வயது 21). இவர் கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் ரூ.3.60 கோடிக்கு ஏலம் போனார். இவரை குஜராத் டைட்டன்ஸ் அணி (Gujarat Titans) வாங்கியது. இவர் சமீபத்தில் 23 வயதுக்குட்பட்டோர் சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் 137 ரன்கள் குவித்து அசத்தினார். ICC WTC Points Table: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியல்... முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா..!

இந்த நிலையில் அவர் ராஞ்சியில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தில் சிக்கினார். இதில் அவர்க்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. விபத்தில் அவரது மோட்டார் சைக்கிளின் முன்பக்கம் சேதமாகியுள்ளது. மேலும் இந்த விபத்தின் காரணமாக ஐ.பி.எல். போட்டிக்கான குஜராத் அணியின் பயிற்சியில் அவர் இணைவதில் சில நாட்கள் தாமதம் ஆகும் என்று தெரிகிறது.

(The above story first appeared on LatestLY on Mar 04, 2024 05:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).