ICC WTC Points Table: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியல்... முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா..!

வெலிங்டன்னில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியதை அடுத்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ICC WTC Points Table: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியல்... முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா..!
ICC WTC Points Table (Photo Credit: @CricCrazyJohns X)

மார்ச் 04, புதுடெல்லி (New Delhi): தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.- இதில் டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதிலும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது. Spinal Muscular Atrophy: காவலரின் மகனுக்கு இப்படி ஒரு சோகமா?.. ரூ.17.5 கோடி ஊசிக்காக உதவி கேட்டு கோரிக்கை.!

இந்த தோல்வியின் காரணமாக நியூசிலாந்து அணி புள்ளிகளின் சதவீதப் பட்டியலில் (percentage of points) 75ல் இருந்து 60 புள்ளிகளாக சரிந்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது 55 சதவீதப் புள்ளிகளில் இருந்து 59.09 சதவீதப் புள்ளிகளுக்கு முன்னேறியுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில், 5ல் வெற்றி, 2 தோல்விகள், ஒரு ட்ரா என மொத்தமாக 64.58 புள்ளிகளைப் (ICC World Test Championship) பெற்றுள்ளது.

(The above story first appeared on LatestLY on Mar 04, 2024 10:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).