YuppTV: "குருநாதா.. என்ன புது ஆப்ப விட்ருக்காங்க.. " ஐபிஎல் பார்ப்பதற்கு புதிய ஆப் வெளியீடு..!

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை ​​ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோசினிமா மூலம் பார்க்கலாம். அதே நேரம் ஐபிஎல் 2024 உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒளிபரப்பப்படும். பிரபலமான மொபைல் செயலிகளில் ஒன்றான YuppTV ஐபிஎல் 2024 இன் நேரடி ஒளிபரப்பு உரிமையை 70 நாடுகளுக்கு மேல் பெற்றுள்ளது.

IPL (Photo Credit: @ShuhidAufridi X)

மார்ச் 22, புதுடெல்லி (New Delhi): வருடா வருடம் நடைபெறும் ஊர் திருவிழாவை போல் வருடா வருடம் ஐபிஎல் (IPL) திருவிழா நடத்தப்பட்டு இந்தியாவையே கலகலக்க செய்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் இந்த ஐபிஎல் தொடர் இம்முறை பல மாற்றங்களுடன் தொடங்கவுள்ளது. அதன்படி ஐபிஎல் தொடர் இன்று தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது. தொடருக்கான அட்டவணை வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. அதிலும் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் என்பதால் ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு 2024 சீசனுக்கான ஐபிஎல் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (CSK vs RCB) மோதுகிறது. இந்த இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை ​​ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோசினிமா மூலம் பார்க்கலாம். அதே நேரம் ஐபிஎல் 2024 உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒளிபரப்பப்படும். பிரபலமான மொபைல் செயலிகளில் ஒன்றான YuppTV ஐபிஎல் 2024 இன் நேரடி ஒளிபரப்பு உரிமையை 70 நாடுகளுக்கு மேல் பெற்றுள்ளது. Russia Jails Woman For Writing "No To War": வாக்குச்சீட்டில் ‘போர் வேண்டாம்’ என எழுதிய பெண்.. சிறை தண்டனை விதித்த ரஷ்யா அதிபர்..!

Yupp Tvயின் மூலம் ஐபிஎல் நேரலையைக் காணும் நாடுகளின் பட்டியல்:

அல்பேனியா, அன்டோரா, ஆர்மேனியா, ஆஸ்திரியா, அஜர்பைஜான், பெலாரஸ், பெல்ஜியம், போஸ்னியா-ஹெர்சகோவினா, பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, ஜெர்மனி, ஜிர்ஜியா, ஜிர்ஜியா, ஜெர்மனி, ஹங்கேரி, ஐஸ்லாந்து மற்றும் பரோயே தீவுகள், இத்தாலி, கஜகஸ்தான், கொசோவோ, கிர்கிஸ்தான், லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மாசிடோனியா, மால்டா, மால்டோவா, மொனாக்கோ, மாண்டினீக்ரோ, நெதர்லாந்து, நார்வே, ருமேனியா, ரஷ்யா, போர்ச்சுகல் சான் மரினோ மற்றும் வத்திக்கான் நகரம், செர்பியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, தஜிகிஸ்தான், துருக்கி, துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான், இஸ்ரேல், புருனே, கம்போடியா, சீன மக்கள் குடியரசு, கிழக்கு திமோர், இந்தோனேசியா, ஜப்பான், லாவோஸ், மக்காவு மங்கோலியா, மியான்மர், வட கொரியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் ஐபிஎல் 2024 நேரடி ஒளிபரப்பை YuppTV வழங்கும்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement