ஆகஸ்ட் 02, கொழும்பு (Sports News): இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் (India Tour Of Sri Lanka 2024) மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, இந்தியா-இலங்கை ( SL Vs IND 1st ODI) அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 02) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் அசலங்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். PV Sindhu Bows Out Of Paris Olympics 2024: ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறிய பி.வி. சிந்து.. காரணம் என்ன தெரியுமா?!
இதனையடுத்து, முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டகாரர் அவிஸ்கா 1 ரன்னுக்கு அவுட் ஆனார். பின்னர், களமிறங்கிய மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல், அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். ஒருபுறம் பதும் நிசங்கா மட்டும் நிதானமாக விளையாடி 75 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.
ஒரு கட்டத்தில் 142 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறிய இலங்கை அணி, இறுதியில் துனித் வெல்லாலகேவின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 230 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக துனித் வெல்லாலகே 66 ரன்களும், பதும் நிசங்கா 56 ரன்களும் அடித்தனர். இந்திய அணி சார்பில் அர்ஸ்தீப் சிங், அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்களும், சிராஜ், டுபே, குல்தீப் யாதவ், சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
KL Rahul - IPL wala rule hai kya 😭😭#INDvsSLpic.twitter.com/qsbPbwvbkr
— Shameel Ahmed (@shameeluu) August 2, 2024