PV Sindhu (Photo Credit: @mufaddal_vohra X)

ஆகஸ்ட் 02, பாரிஸ் (Sports News): சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும் (Paris Olympics). 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் ஜூலை 26 அன்று கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் செயல்பாடு: ஆண்களுக்கான 50 மீட்டர் 3P துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 75 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். மகளிர் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். Indian Golfer Car Crash: இந்திய கோல்ப் வீராங்கனை சென்ற கார் விபத்து; ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள சென்றபோது நேர்ந்த சம்பவம்..!

வெளியேறிய பிவி சிந்து: இந்நிலையில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளி மற்றும் வெண்கலம் என்று 2 பதக்கங்களை வென்று கொடுத்த பிவி சிந்து (PV Sindhu), இன்று 6வது நாளில் பேட்மிண்டன் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு எலிமினேட்டர் சுற்று போட்டியில் சீனாவின் ஹி பிங்க்ஜியாவோவை  (He Bing Jia) எதிர்கொண்டார். அதில் 19-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளார்.